search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு காவல் சட்டம்"

    விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சாராய வியாபாரிகள் 2 பேரை தடுப்புகாவல் சட்டத்தில் பிரம்மதேசம் போலீசார் கைது செய்தனர்.
    விழுப்புரம்:

    சின்னசேலம் தாலுகா பாண்டியங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேது (வயது 26). சாராய வியாபாரி.

    கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் சேதுவை கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திண்டிவனம் தாலுகா ஆசூரை சேர்ந்த குப்பன் (42) என்பவரும் தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டதால் அவரை பிரம்மதேசம் போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து, இவர்கள் இருவரும் சாராய வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் சேது, குப்பன் ஆகிய இருவரையும் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து சேதுவை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரும், குப்பனை பிரம்மதேசம் போலீசாரும் கைது செய்தனர்.
    புதுப்பேட்டை அருகே தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த பெண் சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பொன்னாங்குப்பம்-அரசூர் மெயின்ரோட்டில் வசித்து வருபவர் ஆதிசே‌ஷன். இவரது மனைவி தனலட்சுமி(வயது55). இவர் தனது வீட்டின் பின்புறத்தில் 1,200 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததை புதுப்பேட்டை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். பின்னர் தனலட்சுமியை கைது செய்தனர்.

    இவர் மீது புதுப்பேட்டை, பண்ருட்டி போலீஸ் நிலையங்களில் 8 சாராய வழக்குகள் உள்ளன. இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவரின் குற்றச்செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு அவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பரிந்துரைத்தார். அதன்பேரில் தனலட்சுமியை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீசாருக்கு கலெக்டர் தண்டபாணி உத்தரவிட்டார். 

    அதன்படி தனலட்சுமி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ×